ETV Bharat / state

பிளாஸ்டிக் டப்பாவில் சிக்கிய மரநாய் - தக்க சமயத்தில் காப்பாற்றிய வன ஆர்வலர்

பிளாஸ்டிக் டப்பாவில் சிக்கி உயிருக்குப் போராடிவந்த மரநாயை வன ஆர்வலர் காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் சேர்த்தார்.

author img

By

Published : Oct 9, 2022, 10:22 PM IST

பிளாஸ்டிக் டப்பாவில் சிக்கிய மரநாய்
பிளாஸ்டிக் டப்பாவில் சிக்கிய மரநாய்

கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் மரநாய் ஒன்று பிளாஸ்டிக் டப்பாவில் சிக்கி உயிருக்குப் போராடுவதாக வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற செல்லா, பிளாஸ்டிக் டப்பாவில் முகம் மாட்டிய நிலையில் இருந்த மரநாயை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பிளாஸ்டிக் டப்பாவிற்குள் இருக்கும் உணவை சாப்பிட முயன்ற போது அது அந்த டப்பாவிற்குள் சிக்கியது தெரியவந்தது. முகத்தில் சிக்கிய டப்பாவை வெகு நேரமாக வெளியே எடுக்க முடியாத காரணத்தினால் மூச்சு திணறல் ஏற்பட்டு மரநாய் மயங்கி விழுந்தது.

அங்கு சென்ற செல்லா அந்த மரநாயை தூக்கி அந்த பிளாஸ்டிக் டப்பாவை அதன் முகத்திலிருந்து அகற்றினார். உடனடியாக நாய் மயக்கம் தெளிந்து துடிக்க ஆரம்பித்தது. அதன் பிறகு அதனை பாதுகாப்பான இடத்தில் சென்று சேர்த்தனவுடன் அந்த மரநாய் ஓடி மறைந்தது.

பிளாஸ்டிக் டப்பாவில் சிக்கிய மரநாய்

உரிய நேரத்தில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் காரணமாக மரநாயின் உயிர் காப்பாற்றப்பட்டது. சிறிது கால தாமதமாக சிறிது தாமதாமாக சென்றிருந்தால் கூட அந்த மரநாய் உயிரிழந்திருக்க கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிதம்பரத்தில் தொடரும் குழந்தை திருமணம் - தீட்சிதர் உடன் தாய், தந்தை கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.