ETV Bharat / state

விலங்கல்பட்டில் தொடங்கிய மறுவாக்குப்பதிவு

கடலூர்: விலங்கல்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் 4ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கான மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

CUDDALORE WARD MEMBER RE-ELECTION STARTS
கடலுரில் தொடங்கிய மறுவாக்குப்பதிவு
author img

By

Published : Jan 1, 2020, 10:36 AM IST

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட விலங்கல்பட்டு ஊராட்சியில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் நான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் மோகனாவின் கார் சின்னம் வாக்குச்சீட்டில் பதிவாகவில்லை.

இந்நிலையில், தேர்தல் அலுவலர்கள் உயர் அலுவலர்களிடம் கலந்தாலோசித்து அதுவரை பதிவுசெய்யப்பட்ட 32 வாக்குகள் செல்லாது என அறிவித்து மீண்டும் வாக்குப்பதிவை தொடங்கினர்.

இதற்கு 32 வாக்காளர்களும் வேட்பாளர் மோகனாவின் ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து , மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி விலங்கல்பட்டு ஊராட்சி 4ஆவது வார்டு ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மட்டும் ஜனவரி ஒன்றாம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

கடலுரில் தொடங்கிய மறுவாக்குப்பதிவு

இதையடுத்து, இன்று வார்டு உறுப்பினருக்கான வாக்குப்பதிவில் மக்கள் காலை 7 மணியிலிருந்து வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர். முதல்கட்ட வாக்குப்பதிவின்போது, வாக்காளர்களித்தவர்களுக்கு ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நடைபெறும் மறுவாக்குப்பதிவில் நடு விரலில் மை வைக்கப்பட்டுவருகிறது. இந்தத் தேர்தலில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தேனியில் மறுவாக்குப்பதிவில் குறைந்த வாக்குகள்!

Intro:கடலூர் மாவட்டம் விலங்கல்பட்டு ஊராட்சி ஒன்றிய 4 ஆவது மறுவாக்குப்பதிவு தொடங்கியது
Body:கடலூர்
ஜனவரி 1,

கடந்த ஒன்பது வருடங்களுக்குப் பின்பு தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 27ஆம் தேதி முதல் கட்டமாகவும் 30ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது. கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விலங்கல்பட்டு ஊராட்சியில் கடந்த 27ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது இந்த ஊராட்சியில் 6 வார்டுகள் உள்ளன இதில் நாலாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்டனர் இங்கு 193 வாக்காளர்கள் இருந்து வந்தனர் இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் நான்கு வேட்பாளர்களில் ஒரு வேட்பாளரான மோகனா என்பவரின் கார் சின்னம் வாக்குச் சீட்டில் பதிவாகவில்லை இந்த நிலையில் தேர்தல் நடைபெற்ற போது 32 வாக்காளர்கள் வாக்குப்பதிவில் ஈடுபட்டிருந்தனர் அப்போது மோகனா ஆதரவாளர்கள் வாக்குச்சீட்டில் சின்னம் இல்லை என்பதனை கண்டுபிடித்து தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது மேலும் தேர்தல் அலுவலர்கள் உயரதிகாரிகளிடம் கலந்தாலோசித்து 32 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் செல்லாது என அறிவித்து மீண்டும் வாக்குப்பதிவை தொடங்கினர் ஆனால் 32 வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சீட்டில் சின்னம் பதிவாகாத வேட்பாளர் மோகனா மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் விலங்கல்பட்டு ஊராட்சி 4 வது வார்டு ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மட்டும் 1 ந் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என உத்தரவிட்டார். இதுவே தொடர்ந்து இன்று காலையில் தேர்தல் அலுவலர்கள் வாக்குச்சீட்டு வாக்குப் பெட்டிகள் மற்றும் தளவாட பொருட்கள் வாக்குச்சாவடி மையத்தில் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன பின்னர் இன்று காலை 7 மணியிலிருந்து வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது இதனைத்தொடர்ந்து வாக்காளர்கள் ஒவ்வொருவராக வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்தனர் பின்னர் தேர்தல் அலுவலர் அவர்களது ஆவணங்களை சோதனை செய்த பிறகு வாக்குப்பதிவு செய்வதற்கு அனுமதித்தனர் பின்னர் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து சென்றனர் . மேலும் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது. இந்த நிலையில் விலங்கல்பட்டு ஊராட்சியில் மறு வாக்குப்பதிவு நடைபெறுவதால் வாக்களித்த அனைத்து வாக்காளர்களும் நடு விரலில் மை வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் கீதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் வாக்குச்சாவடி மற்றும் 4-வது வார்டு பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அந்த பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.