ETV Bharat / state

ஆதார் கார்டுடன் ரூ.500 கொடுத்தால் இ-பாஸ்; வாட்ஸ்அப் ஆடியோவால் பரபரப்பு - ரூ.500 கொடுத்தால் இ-பாஸ்

கடலூர்: ஆதார் கார்டுடன் 500 ரூபாய் கொடுத்தால் அரை மணி நேரத்தில் இ-பாஸ் கொடுப்பதாக பேசிய டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவரின் வாட்ஸ்அப் ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் ஆடியோவால் பரபரப்பு
வாட்ஸ்அப் ஆடியோவால் பரபரப்பு
author img

By

Published : Aug 4, 2020, 6:25 PM IST

கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி உயிரிழப்பு, திருமணம், மருத்து தேவை ஆகிய அவசர தேவைகளுக்கு மட்டுமே வெளியூர் செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடலூரில் உள்ள டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவர் தனது வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டுள்ள ஆடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் அவர், நமது வாட்ஸ்அப் குரூப்பில் இ-பாஸ் தேவைப்படுபவர்கள் ஆதார் கார்டுடன் ரூ. 500 கொடுத்தால் அரைமணி நேரத்தில் இ-பாஸ் பெற்றுத்தரப்படும். அது போலி அல்ல உண்மையான இ-பாஸ். இதுவரை நாங்கள் 50 ஆயிரம் இ-பாஸ்கள் வரை பெற்றுதந்துள்ளோம்" என பேசியுள்ளார்.

வாட்ஸ்அப் ஆடியோ

தற்போது அந்த ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதனால் மக்கள் எப்படி அவர்களுக்கு மட்டும் அத்தியாவசிய தேவைகளின்றி இ-பாஸ் கிடைக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் உடனடி விசாரணை நடத்த கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: இ-பாஸ் முறைகேடு - அமைச்சர் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.