கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீநெடுஞ்சேரி ஊராட்சியில் 3 ஆயிரத்து 707 வாக்காளர்கள் உள்ளனர். ஒன்பது வார்டுகளாக கொண்ட இவ்வூராட்சியில் ஐந்து வார்டுகள் ஆதி திராவிடர்களுக்கும், நான்கு வார்டுகள் பொது பிரிவினருக்கும் பிரிக்கப்பட்டிருந்தது. இதில் ஆறாவது வார்டு பொதுப்பிரிவு பெண்கள் வார்டாகும்.
இந்நிலையில் வருகிற உள்ளாட்சித் தேர்தலில், பொதுப்பிரிவு பெண்கள் வார்டாக இருந்த ஆறாவது வார்டை அலுவலர்கள் ஆதி திராவிடர் பெண்கள் வார்டாக மாற்றியுள்ளனர். 428 வாக்காளர்கள் கொண்ட ஆறாவது வார்டில் ஒருவர்கூட ஆதிதிராவிடர் இல்லை என்பதால் அப்பகுதி மக்களால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் உண்ணாவிரதம், கருப்பு கொடி ஏற்றுதல் போராட்டங்கள் நடத்தியும் தேர்தல் அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வார்டு வரையறை குளறுபடியால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமலும், உள்ளாட்சி பிரதிநிதியை தேர்ந்தெடுக்க முடியாமலும் தவித்துவருவதாக வருத்தம் மக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வார்டு வரையறையால் 3 கி.மீ அலைச்சல் - அடையாள அட்டைகளுடன் தர்ணா!