கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் தேமுதிக செயல் வீரர்கள் கூட்டம் இன்று (மார்ச் 9) நடைபெற்றது. இதில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக தலைமையில் பல குழப்பங்கள் உள்ளன. அதனாலேயே கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது. நாங்கள் தனித்து போட்டியிடுவோம்.
மக்கள் நீதி மையம், டிடிவி தினகரன் உடன் சேர மாட்டோம். ஏனென்றால் அரசியலில் நாங்கள் அவர்களுக்கு சீனியர்" என்றார்.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக... அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பாதிப்படையுமா?