சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் 6 பேர் சென்னையில் இருந்து நேற்று சென்றுள்ளனர். அவர்கள் சாமி தரிசனம் செய்த பின்னர் வீராணம் ஏரியை சுற்றி பார்ப்பதற்காக ஏரிக்கரை சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீராணம் ஏரிக்குள் பாய்ந்தது.
வீராணம் ஏரியின் கரையோரம் ஆழம் குறைவாக இருந்ததால் அவர்கள் எவ்வித சிறு காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புத்தூர் காவல்துறையினர் தண்ணீரில் மூழ்கி இருந்த காரை கிரேன் மூலம் மீட்டனர். இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.