கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த புவனகிரி தொகுதிக்குட்பட்ட கொளப்பாக்கம் கிராமத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முத்துக்குமாரின் புதிய மினரல் வாட்டர் கம்பெனியை திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
அதன் பின்பு மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள், பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார். நிகழ்ச்சியில் உதயநிதிக்கு திமுகவினர் திருவள்ளூவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்.
இதையும் படிங்க: கடலூரில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சம்பத்!