புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு அவ்வப்போது மது கடத்தப்படுகிறது. இதனால் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே மதுவிலக்கு காவல் துறையினர் வாகன சோதனை செய்வது வழக்கம். இந்நிலையில் பதிவெண் இல்லாமல் வந்த மாருதி 800 வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்தனர்.
அப்பொழுது வாகனத்திலிருந்த பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் காவல் துறையினர், காரை சோதனை செய்ததில் அதில் ஐந்து சாக்குகளில் 150 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து விசாரணை செய்ததில் கடலூர் அடுத்த குறவன்பாளையம் பகுதியைச் சேர்ந்த வனிதா என்றும் அவருடைய உறவினர் சிவமணி ஓட்டுநராக வந்ததும் இவர்கள் புதுச்சேரியிலிருந்து தங்கள் ஊருக்கு சாராயம் கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவருடைய காரை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: கேரளாவில் பறவைக் காய்ச்சல் உறுதி