ETV Bharat / state

விருத்தாச்சலத்தில் 2 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது - Crime news

கடலூர்: விருத்தாச்சலத்தில் 2 கிலோ கஞ்சா கடத்திய இருவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

விருத்தாச்சலத்தில் 2 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது

author img

By

Published : Jun 18, 2021, 6:36 PM IST

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் புதுப்பேட்டை அம்மன் குளம் அருகில் காவல் ஆய்வாளர் விஜயரங்கன் தலைமையில், காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாகவந்த நபரை தடுத்துநிறுத்தி காவல் துறையினர் விசாரித்தனர்.

இந்த விசாரணையின் போது, அவரது துணி பையில் சிறு, சிறு பொட்டலங்களில் ஒரு கிலோ 150 கிராம் எடை கொண்ட கஞ்சா இருப்பதைக்கண்ட காவல் துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அரியலூர் மாவட்டம் சிலம்பூரை சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைதுசெய்தனர்.

1 கிலோ 100 கிராம் கஞ்சா

அதேபோல் விருத்தாச்சலம் ராமன் தெருவில் சந்தேகத்திற்கிடமாக துணி பையுடன் சுற்றித்திரிந்த நபரை விசாரணை மேற்கொண்டபோது, 1 கிலோ 100 கிராம் எடைகொண்ட போதைப்பொருளான கஞ்சா இருப்பதைக்கண்ட காவல் துறையினர் அவற்றை பறிமுதல்செய்து கைதுசெய்தனர். பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவுசெய்து சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.