ETV Bharat / state

கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக வாக்கு வங்கியில் சரிவு: டிடிவி பரப்புரை

கடலூர்: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்த பிறகு திமுகவின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 13, 2019, 7:32 AM IST

ttv

கடலூர் மக்களவைத் தொகுதியின் அமமுக வேட்பாளர் காசி.தங்கவேலுக்கு ஆதரவாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.

டிடிவி பரப்புரை

அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவை வஞ்சித்த மோடி, அவரை டாடி என்றழைத்த தமிழ்நாட்டு அரசின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லையெனக் கூறியவர் ஜெயலலிதா. அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை கேட்டு நீதிமன்றம் சென்றதோடு, ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவர் சிறையில் இருந்திருப்பார் என்று கூறியவர்கள், தற்போதைய ஆட்சியாளர்களை மானங்கெட்டவர்கள் என்று கூறியவர்களுடன் இவர்கள் கூட்டணி வைத்திருப்பதால் இதனை மானங்கெட்ட கூட்டணி என்று கூறுகிறேன்.

மதச்சார்பற்ற கூட்டணி என்று கூறும் திமுக, இந்து மதத்தை விமர்சித்து வருகிறது. தற்போது இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் திமுகவை கைவிட்ட நிலையில், இந்துக்களுக்கு திமுக விரோதியல்ல, எங்கள் வீட்டு பெண்களும் கோயிலுக்குச் செல்வார்கள் என்று கூறிவருகிறார் மு.க.ஸ்டாலின்.

எந்த மதத்தினரும், யாரையும் தரம் தாழ்த்துவது இல்லை. ஆனால், இந்து மதத்தை கண்டுபிடித்தவர்கள் போல கூறிக்கொள்ளும் பாஜக தங்களை இந்துக்களுக்கு பாதுகாவலர்கள் என்று கூறுகிறது. திமுக இந்து எதிர்ப்பு நிலையை எடுத்துள்ளது. ஆனால், அரசியல்வாதிகள் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். மக்களுக்கு தண்ணீர் பிரச்னை, நீட் தேர்வு பிரச்னை, என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பிரச்னை, விவசாய விளை பொருட்களுக்கு விலை கிடைக்காமை இவ்வாறு பல்வேறு தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் உள்ளன. கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் திமுகவின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது” என்றார்.

கலைஞர் மறைவுக்கு பிறகு திமுக வாக்கு வங்கி குறைந்து விட்டது. எனவே பல கட்சிகள் உடன் கூட்டணி வைத்து மீடியா மூலமாக வெற்றி பெறுவதாக மாயையை ஏற்படுத்துகிறார்கள்-டி.டி.வி.தினகரன்

கடலூர்
ஏப்ரல் 12,

கலைஞர் மறைவுக்கு பிறகு திமுக வாக்கு வங்கி குறைந்து விட்டது. எனவே பல கட்சிகள் உடன் கூட்டணி வைத்து மீடியா மூலமாக வெற்றி பெறுவதாக மாயையை ஏற்படுத்துகிறார்கள் என டி.டி.வி.தினகரன் பேசினார்.

கடலூர் மக்களவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காசி.தங்கவேல் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடலூர் உழவர் சந்தையில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது;
இந்தியாவை வஞ்சித்த மோடி, அவரை டாடி என்றழைத்த தமிழக அரசின் ஆட்டம் முடிவுக்கு வந்து விட்டது. பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லையெனக் கூறியவர் ஜெயலலிதா. அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை கேட்டு நீதிமன்றம் சென்றதோடு, ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவர் சிறையில் இருந்திருப்பார் என்று கூறியவர்கள் மேலும், தற்போதைய ஆட்சியாளர்களை மானங்கெட்டவர்கள் என்றும் கூறியவர்களுடன் தற்போது இவர்கள் கூட்டணி வைத்திருப்பதால் இதனை மானங்கெட்ட கூட்டணி என்று கூறுகிறேன்.
மதசார்பற்ற கூட்டணி என்று கூறும் திமுக, இந்து மதத்தை விமர்சித்து வருகிறது. தற்போது இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள் திமுகவை கைவிட்ட நிலையில், இந்துக்களுக்கு திமுக விரோதியல்ல, எங்கள் வீட்டு பெண்களும் கோயிலுக்குச் செல்வார்கள் என்று கூறி வருகிறார் மு.க.ஸ்டாலின்.
எந்த மதத்தினரும், யாரையும் தரம் தாழ்த்துவது இல்லை. ஆனால், இந்து மதத்தை கண்டுபிடித்தவர்கள் போல கூறிக்கொள்ளும் பாஜக தங்களை இந்துக்களுக்கு பாதுகாவலர்கள் என்று கூறுகிறது. திமுக இந்து எதிர்ப்பு நிலையை எடுத்துள்ளது. 
ஆனால், அரசியல்வாதிகள் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். மக்களுக்கு தண்ணீர் பிரச்னை, நீட் தேர்வு பிரச்னை, என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பிரச்னை, விவசாய விளை பொருட்களுக்கு விலை கிடைக்காமை இவ்வாறு பல்வேறு தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் உள்ளன. ஜெயலலிதா இருக்கும் வரையில் ஜிஎஸ்டி வரியை தடுத்து வந்தார். 
கருப்பு பணத்தை ஒழிப்பதாகக் கூறிய மோடி பணத்தையே ஒழித்து விட்டார். தற்போதைய நிலையில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவை மீட்க வேண்டிய நிலை உள்ளது.
தமிழகத்தில் படித்த இளைஞர்கள் 1 கோடி பேர் வேலைக்காக காத்திருக்கிறார்கள். எல்லைத் தாண்டிச் செல்லும் மீனவர்களை பிடிக்கும் பிரச்னை போன்ற தீர்க்க வேண்டிய பிரச்னைகள் குறித்து அரசியல்வாதிகள் பேச வேண்டும்.
எனவே, பொதுமக்கள் ஜாதி, மதம் குறித்து பேசுபவர்களை புறக்கணித்து, ஜாதிமதமற்ற சமுதாயம் உருவாக அமமுகவை ஆதரிக்க வேண்டும்.
மாநிலகட்சிகளால் மட்டுமே மாநில பிரச்னையை தீர்க்க முடியும். தேசிய கட்சிகளை மக்கள் நம்பக் கூடாது. பணம் கொடுத்து மக்களை வாங்கி விடலாம் என்று நினைப்பவர்களை புறக்கணிக்க வேண்டும். 
காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணியில் இருந்து மத்தியில் பல்வேறு அமைச்சர் பொறுப்புகளில் இருந்த திமுக தமிழகத்திற்காக எதுவும் செய்யவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் தனது வைப்புத்தொகையை திமுக இழந்தது. கலைஞரின் மறைவிற்குப் பின்னர் திமுகவின் வாக்கு வங்கி குறைந்து விட்டது. எனவே, தொலைக்காட்சிகள் மூலமாக வெற்றி பெறுவோம் என்ற மாயையை உருவாக்கி வருகிறார் என்று பேசினார்.

Video send mojo
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.