ETV Bharat / state

கடலூரில் ஆசைவார்த்தை கூறி இளைஞரிடம் ரூ.1 லட்சம் பறித்த 2 திருநங்கைகள் கைது! - Transgenders arrested

Cuddalore News: கடலூரில், சாலையில் சென்ற இளைஞரிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்ற திருநங்கைகள், அவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு, விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 5:51 PM IST

கடலூர்: கடலூர் பேருந்து நிலையம் மற்றும் ஜவான் பவன் சாலையில் தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில், திருநங்கைகள் சிலர், அவ்வழியாகச் செல்லக்கூடிய நபர்களிடம் ஆபசமாக பேசி தவறாக நடந்து கொள்வதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. மேலும் சில நேரங்களில் உல்லாசத்திற்கு அழைத்துச் செல்லும் ஆண்களிடம் அத்துமீறுவதோடு, அவர்கள் வைத்திருக்கும் பொருள்களை மிரட்டி வாங்கிக் கொண்டு செல்வதாகப் புகார்கள் வந்தன.

இந்த நிலையில் நேற்றிரவு (அக்.03) கடலூர் பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த இரண்டு திருநங்கைகள், அந்த இளைஞரை உல்லாசத்திற்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. 500 ரூபாய்க்கு உல்லாசமாக இருக்கலாம் என அழைத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரிடம் கட்டாக இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திடீரென இரண்டு திருநங்கைகளும் பறித்துக் கொண்டனர். மேலும் அந்த இளைஞரை மிரட்டி அனுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் இது குறித்து கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த காவல் துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று இரண்டு திருநங்கைகளையும் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்களிடம் சோதனை செய்தபோது இளைஞரிடம் இருந்து பறித்த 93 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ஆண்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், இதனை மீறி யாரேனும் தட்டி கேட்டால் அவர்களைத் திருநங்கைகள் சூழ்ந்து மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சாலையில் சென்ற இளைஞரிடம் பணத்தைப் பறித்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் இரு திருநங்கைகள் ஒரு இளைஞரை அடித்து செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் நடைபெற்றது. அவ்வப்பொழுது காவல் துறை இரவு நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாலும், ஜவான் பவன், கம்பியம்பேட்டை சாலைகளில் சுடுகாட்டுப் பகுதிகளில் அடிக்கடி திருநங்கைகளின் அட்டூழியம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: காதலியின் கழுத்தை அறுக்க ஆன்லைனில் கத்தி ஆர்டர்.. நெல்லை இளம்பெண் கொலையில் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.