ETV Bharat / state

கரோனா பணியில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்தித் தரக்கோரி போராட்டம் - சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

கடலூர்: கரோனா பணியில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்களின் மாத ஊதியத்தை உயர்த்தி வழங்கிடக் கோரி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பயிற்சி மருத்துவர்கள் பணிகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

students
students
author img

By

Published : Jul 23, 2021, 3:09 PM IST

Updated : Jul 23, 2021, 3:52 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன. இந்தக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களாகப் பணியாற்றும் இறுதியாண்டு மாணவர்கள், பல்கலைக்கழக மருத்துவமனையில் கரோனா பிரிவுகளில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துவருகின்றனர்.

இவர்களுக்கு மாத ஊதியமாக மூன்றாயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வழங்கப்பட்டுவரும் நிலையில், தங்களுக்கும் மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என இவர்கள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வந்தனர்.

ஆனால் இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் இன்று (ஜூலை 23) பணிகளைப் புறக்கணித்தனர்.

பின்னர் மருத்துவமனை வளாகத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் தரையில் அமர்ந்து கவன ஈர்ப்பு, முழு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: மாணவர்கள் மீது வழக்குப்பதிவு: எச்சரிக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகம்!

Last Updated : Jul 23, 2021, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.