ETV Bharat / state

‘கட்டட விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி’ - முதலமைச்சர்

கடலூரில் கட்டட விபத்தில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கட்டட விபத்து
கட்டட விபத்து
author img

By

Published : Jan 27, 2022, 4:28 PM IST

கடலூர்: ராமாபுரம் கிராமத்திலுள்ள பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் வீரசேகர் மற்றும் சதிஷ் ஆகிய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைக் கேட்டு மிகுந்த துயரமடைந்ததாகவும், இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதாகவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்த சிறுவன் புவனேஷுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்திரவிடப்பட்டுள்ளதாகவும், இதில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் புவனேஷின் குடும்பத்தாருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.