ETV Bharat / state

வேப்பூர் அருகே மூன்று குழந்தைகள் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு!

வேப்பூர் அருகே ஏரியில் மூழ்கி மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூன்று குழந்தைகள் ஏரியில் மூழ்கி பலி
மூன்று குழந்தைகள் ஏரியில் மூழ்கி பலி
author img

By

Published : Jan 27, 2021, 10:05 AM IST

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இலங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமு - மணிமேகலை தம்பதியர். இவர்களுக்கு 3 1/2 வயதில் விக்னேஷ், சர்வேஷ் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் மணிமேகலை தனது சொந்த ஊரான திருப்பெயரில் உள்ள அவரது அப்பா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றார்.

இந்த நிலையில் மணிமேகலையின் இரட்டைக் குழந்தைகள், அவரது உறவினரான மணிகண்டன் - மல்லிகா தம்பதியர் மகன் விவேகன் ஆகிய மூவரும் நேற்று (ஜனவரி 27) விளையாடிக் கொண்டிருந்தனர். வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மாலையில் மாயமாகினர்.

பெற்றோர் மற்றும் உறவினர்கள், 5 மணிவரை பல இடங்களில் தேடினர். ஆனாலும் குழந்தைகள் கிடைக்காததால், வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் படி, துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அக்கிராமத்தின் அருகேயுள்ள ஏரியில் குழந்தைகள் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தீயணைப்பு துறை வீரர்களுடன், கிராம மக்களும் 15 அடி ஆழம் கொண்ட ஏரியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் சம்பவம் குறித்து தகவலறிந்த விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் கலைச்செல்வன், சார் ஆட்சியர் பிரவீன்குமார் உள்ளிட்டோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல்பணியை தீவிரப்படுத்தினர். சுமார் 7 மணி நேர தீவிர தேடுதலுக்கு பின்பு மணிமேகலையின் இரட்டைக் குழந்தைகளான விக்னேஷ் மற்றும் சர்வேஷ் ஏரியில் இருந்து சடலமாக தீயணைப்புத் துறையினர் கண்டெடுத்தனர்.

மணிகண்டனின் மகனான விவேகன் கிடைக்காததால், தீயணைப்புத் துறையினர், பொதுமக்களின் உதவியுடன், தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று(ஜன.25) இரவு முழுவதும் விவேகன் உடலை தீயணைப்பு வீரர்கள் தேடியும் கிடைக்கவில்லை.

இதனிடையே வேப்பூர் காவல்துறையினர் சர்வேஷ், விக்னேஷ் ஆகிய 2 குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.

அதேசமயம் இன்று (ஜன.26) காலை கடலூரில் இருந்து வந்த பேரிடர் மீட்பு குழுவினர் குழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேர தேடுதலுக்கு பின் விவேகன் சடலமும் மீட்கப்பட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: தமிழ்நாடு காப்புகாட்டிற்குள் பாதை அமைத்த கேரள நிறுவனம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.