கடலூர் மாவட்டம் குண்டு உப்பலவாடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மதியழகன் என்பவரின் மனைவி சாந்தி 145 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். சாந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட தாழங்குடா கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி மனைவி பிரவீனா தோல்வி அடைந்தார்.
இதனால் மாசிலாமணி, வெற்றிபெற்ற சாந்தியின் கணவர் மதியழகனை 'ஊருக்குள் நுழைந்தால் உன்னை வெட்டிவிடுவோம்' என மிரட்டியுள்ளார்.
இதனால் அஞ்சிய மதியழகன், அவரது ஆதரவாளர்கள் நேற்றிரவு 11 மணிவரை கிராமத்திற்குச் செல்லாமல் வாக்கு எண்ணும் மையத்திலேயே தங்கியுள்ளனர். பின்னர், கடலூர் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்புக் கோரி மனு அளித்தார்.
இதனால் அவரின் பாதுகாப்புக்கு காவல் துறை சார்பில் ஐந்து காவலர்கள அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் உயிர் பயத்தால் மதியழகன் வாக்கு மையத்திலேயே தங்கினார்.
இதையும் படிங்க: வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய தேர்தல் அலுவலர்..!