ETV Bharat / state

'திமுக கூட்டணிதான் வெற்றிபெறும்' - தொல். திருமாவளவன் - விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்

கடலூர்: அதிமுகவும் பாஜகவும் தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு செயல் திட்டம் தீட்டினாலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

thirumavalavan
author img

By

Published : Oct 1, 2019, 8:18 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளைக் காட்டி 500க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றிடம் வழங்காததை கண்டித்தும் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய திருமாவளவன், 'விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக களப்பணியாற்றும். இந்த இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் என்பது வரும் பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், 'ஆளும் கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்து வெற்றி பெற முயற்சிக்கின்றனர். அதிமுகவும், பாஜகவும் தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு இந்த செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டாலும், திமுக கூட்டணியே வெற்றி பெறும்' எனக் கூறினார்.

மேலும், 'சிதம்பரம் நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த மக்களை நீதிமன்ற உத்தரவைக் காட்டி 500க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துள்ளனர். அவர்களுக்கு மாற்று இடம் தராதது அதிர்ச்சியளிக்கிறது. என்எல்சியால் பாதிக்கப்படும் கடலூர் மாவட்ட மக்களுக்கே, அந்த நிதியை செலவிட வேண்டும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வு மற்றும் ஆராய்ச்சிகளின் மூலம் தமிழன் பெருமை உலகம் வரை சென்றுள்ளது.

கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் பொருள்களை தமிழ்நாட்டிலேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : ‘திமுகவை மகத்தான வெற்றி பெறச்செய்வோம்’ - வேல்முருகன் உறுதி

Intro:ஆளும் கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்து வெற்றி பெற முயற்சிக்கின்றனர். அதிமுகவும் பாஜகவும் தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு இந்த செயல்களை அரங்கேற்ற திட்டம். ஆனாலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் - சிதம்பரத்தில் தொல் திருமாவளவன் பேட்டி

Body:கடலூர்
அக்டோபர் 1,

சிதம்பரம் நகரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை காட்டி 500-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும்இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றிடம் வழங்காததை கண்டித்தும் திருமாவளவன் தலைமையில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பின்னர் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தீவிரமாக களப்பணியாற்றும் மேலும் இன்று மாலை 4 மணிக்கு விக்கிரவாண்டி தொகுதியில் விசிக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார். இந்த இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் என்பது வரும் பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டம் ஆகும்.

ஆளும் கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்து வெற்றி பெற முயற்சிக்கின்றனர். அதிமுகவும் பாஜகவும் தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு இந்த செயல்களை அரங்கேற்ற திட்டம். ஆனாலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும்.

சிதம்பரம் நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த மக்களை நீதிமன்ற உத்தரவைக் காட்டி 500க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துள்ளனர். அவர்களுக்கு மாற்று இடம் தராதது அதிர்ச்சியளிக்கிறது.

புதுச்சேரி - நாகை 4 வழிச்சாலை பணிகள், பரங்கிப்பேட்டை - விருத்தாசலம் சாலை திட்ட பணிகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். என்எல்சி பொதுத்துறை நிறுவனம் தனது சமூக பொறுப்பு நிதியை தமிழகம் அல்லாத வேறு இடங்களுக்கும் உதவி செய்கிறது. என்எல்சியால் பாதிக்கப்படும் கடலூர் மாவட்ட மக்களுக்கே அந்த நிதியை செலவிட ேவேண்டும்.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வு மற்றும் ஆராய்ச்சிகளின் மூலம் தமிழன் பெருமை உலகம் வரை சென்றுள்ளது

கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் பொருள்களை தமிழ்நாட்டிலேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆலயத்தில் நடைபெற்ற விதிமீறல் திருமணம் கண்டிக்கத்தக்கது. இந்த திருமணம் நடந்ததற்கு பின்னணி என்ன. அதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் முழுமையாக கண்டறிய வேண்டும்

தமிழக அரசு ஒரு உரிய விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என வலியுறுத்தினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.