கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கான புதிய வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 18 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ரத்தமாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான முடிவுகள் இன்னும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் பணியாற்றும் செவிலியர்கள் தங்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் இல்லை. பாதுகாப்பான உடைகள் இல்லை எனக்கூறி பணி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் சண்முகம் சிறப்பு சிகிச்சை வார்டுக்கு சென்று செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் கரோனா சிறப்பு வார்டில் பணியாற்றும் செவிலியர்களுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் எனவும் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து செவிலியர்கள் அனைவரும் பணிக்குச் சென்றனர்.
கரோனா சிறப்பு வார்டில் செவிலியர்கள் அடிப்படை வசதி கோரி எதிர்ப்பு தெரிவித்ததால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: இனி வரும் நாட்களில் எச்சரிக்கை மிக அவசியம் -ஆர்.பி.உதயகுமார்