ETV Bharat / state

கடலூரில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை! - school girl suicide

கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார். பெற்றோர்கள் இறுதிச் சடங்கு செய்ய முற்பட்டபோது, காவல் துறையினர் அதிரடியாக மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலுரில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை
கடலுரில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை
author img

By

Published : Jul 26, 2022, 3:22 PM IST

Updated : Jul 26, 2022, 4:28 PM IST

கடலூர்: விருத்தாச்சலத்தில் செல்போன் கடை நடத்தி வருபரின் இரண்டாவது மகள் அங்குள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், +2 படித்து வருந்தார்.

இந்நிலையில் நேற்று பள்ளிக்குச்சென்ற அந்த +2 மாணவி, மாதாந்திரத்தேர்வு எழுதி உள்ளார். தேர்வு எழுதிவிட்டு, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில், வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டில் உள்ள அறையில் துணியால் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வேலைக்குச்சென்று விட்டு வீடு திரும்பிய மாணவியின் பெற்றோர், தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ள மகளைக் கண்டதும் கதறி அழுது உள்ளனர். இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று, மாணவியின் உடலைத்தூக்கி கயிற்றில் இருந்து கீழே இறக்கி உள்ளனர்.

பின்னர் மாணவியின் உடலை அடக்கம் செய்வதற்காக, மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், பந்தல் அமைத்து இறுதிச்சடங்குக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இது குறித்து விருத்தாச்சலம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததால், விரைந்து சென்ற காவல் துறையினர், இறுதி சடங்குக்காக வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து மாணவியின் தாயார் கூறுகையில், ' மாணவி சிவகாமி மிகவும் திறமைசாலி. கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்தார். சரியாக படிக்க முடியவில்லை என்று கூறினார்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பதையும்? தற்கொலை செய்து கொண்ட மாணவி, இறப்பதற்கு முன்பு கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளாரா? என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்றுவருவது பெற்றோர் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க: 'மாணவியருக்குத்தொல்லை தரும் இழி செயல் நடந்தால் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது' - முதலமைச்சர்

Last Updated : Jul 26, 2022, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.