ETV Bharat / state

'ஏரி நீரை விற்பனை செய்தால் நடவடிக்கை' - ஆட்சியர் எச்சரிக்கை - ஏரி

கடலூர்: ஏரி குளங்களில் உள்ள தண்ணீரை வணிகரீதியாக விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

File pic
author img

By

Published : May 22, 2019, 10:07 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு ஒவ்வொருவருக்கும் 55 லிட்டர் குறையாமல் சீரான சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கோடைக் காலத்தில் வறட்சியால் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்கிட அத்தியாவசிய குடிநீர் பணிகளுக்கு ரூ. 735.48 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்திட அனுமதிக்கப்பட்டுள்ளது. பொது பகிர்மான குழாய்களில் மின் மோட்டார்களை பயன்படுத்தி குடிநீரை எடுத்தால் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்திட சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏரி குளங்களில் உள்ள தண்ணீரை வணிக ரீதியாக விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் குழாய்களில் தண்ணீர் கசிதல் மற்றும் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1941ல் தொடர்புகொண்டு மாவட்ட குடிநீர் கண்காணிப்பு அழைத்து தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்", என்று கூறினார்.

ஏரி குளங்களில் உள்ள தண்ணீரை வணிகரீதியாக விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியதாவது; கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் உள்ளிட்ட குக்கிராம பகுதிகளுக்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 9,150 எண்ணிக்கையிலான கைப்பம்புகள், 3810 எண்ணிக்கையிலான சிறு மின் விசை பம்புகள் 4266 எண்ணிக்கையிலான விசைப்பம்புகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய 17 எண்ணிக்கையிலான கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு ஒவ்வொருவருக்கும் 55 லிட்டர் எல்.பி.சி.டி.க்கு குறையாமல் சீரான சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கோடை காலத்தில் வறட்சியால் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்கிட அத்தியாவசிய குடிநீர் பணிகளுக்காக கிராம ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் மூலம் ரூபாய் 1571.44 லட்சங்கள் மதிப்பீட்டில் 211 குடிநீர் பணிகளும் 14 வது மாநில நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூபாய் 735.48 லட்சங்கள் மதிப்பீட்டில் 467 குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்திட அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது குடிநீர் குழாய்களில் தண்ணீர் கசிதல் மற்றும் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1941ல் தொடர்புகொண்டு மாவட்ட குடிநீர் கண்காணிப்பு அழைத்து தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துப் பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் வழங்கிட ஏதுவாக முறையற்ற குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து துண்டிப்பதுடன் பொது பகிர்மான குழாய்களில் மின் மோட்டார்களை பயன்படுத்தி குடி நீர் உறிஞ்சுவதை கண்டறிந்து அவ்வாறான மின் மோட்டார்கள் பறிமுதல் செய்திட சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்படுகிறது மேலும் ஏரி குளங்களில் உள்ள தண்ணீரை வணிக ரீதியாக விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் கூறியுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.