ETV Bharat / state

நான்கு தலைமுறைகளுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் 'ஆயிரம் காய்ச்சி' பலாமரம்! - Cuddalore District News

கடலூர்: மாளிகம்பட்டு கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான பலாமரம் ஒன்று, பல்வேறு புயல்களை எதிர்கொண்டு கம்பீரமாக நிலைத்து நிற்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பண்ருட்டி பலா மரம்
பண்ருட்டி பலா மரம்
author img

By

Published : Jun 10, 2020, 3:46 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி என்றாலே நம் நினைவுக்கு வருவது பலாப்பழம்தான். ஏனென்றால், பண்ருட்டி பலாப்பழத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. நாவில் உமிழ்நீரைச் சுரக்க வைக்கக்கூடிய அதன் சுவையும், நாசியைத் துளைக்கும் அதன் மணமும் பல்வேறு மருத்துவக் குணங்களை கொண்டது. எனவேதான் பண்ருட்டி பலாப்பழம் உலகப் புகழ்பெற்று விளங்குகிறது.

பண்ருட்டி பகுதியில் சுமார் 1,500 ஏக்கருக்கும் மேல் பலா மரங்கள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டுவருகின்றன. இங்கு விளையும் பலாப்பழங்கள் வெளிமாவட்டங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தப் பலாப்பழங்கள் 10 முதல் 50 கிலோ எடை கொண்டவையாக இருக்கின்றன. பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை சீசன் களைகட்ட தொடங்கும். எனவே இதனை நம்பி பல தொழிலாளர்கள் பலா விற்பனை செய்துவந்தனர்.

2011ஆம் ஆண்டு தானே புயலினால் கடலூர் மாவட்டத்திலுள்ள ஏறக்குறைய 80 விழுக்காடு பலா மரங்கள் வேருடன் சாய்ந்தன. அன்றைய நாள் ஏற்பட்ட சேதத்திலிருந்து விவசாயிகள் மீள்வதற்கு பெரும் சிரமப்பட்டு வந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு கிராமத்தில் ராமசாமி என்பவரது நிலத்தில், இருக்கும் சுமார் 200 ஆண்டுகள் பழமையான பலாமரம் பல்வேறு புயல்களை எதிர்கொண்டு, ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலாப் பழங்களை அளித்து கம்பீரமாக நிலைத்து நிற்கிறது.

இதுகுறித்து அதன் உரிமையாளர் ராமசாமி கூறுகையில், ”இப்பலாமரம் 200 வருடங்களுக்கு முன்னர் எங்களுடைய முன்னோர்கள் நட்டுவைத்தனர். தானே புயல் உள்ளிட்ட பல்வேறு புயல் வந்தபோது பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பலா மரங்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்டன. இதனால் பல விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பாதிப்புக்குள்ளானார்கள். இதிலிருந்து மீள்வதற்கு கடும் சிரமப்பட்டார்கள்.

அந்தப் புயலில் எங்களுடைய மரத்தின், கிளைகள் எல்லாம் உடைந்து பாதிப்புக்குள்ளானது. தோட்டக்கலைத் துறையின் ஆலோசனைப்படி, செயல்பட்டோம் இதனால் எங்கள் மரம் மீண்டு வந்தது. தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலா பழங்களை அளித்துவருகிறது. மரத்தில் 350 பழங்களை மட்டும் விட்டுவிட்டு மீதி பழங்களை விற்பனை செய்வோம். ஆயிரம் பழங்களை இந்த மரம் அளிப்பதால் இதனைச் சுற்றுவட்டாரப் பகுதியினர் 'ஆயிரம் காய்ச்சி' மரம் என்று அழைக்கின்றனர்.

தற்போது கரோனா வைரஸ் காரணமாக பழங்களை விற்க முடியாமல் உள்ளோம். கடந்த ஆண்டு இந்த மரத்தின் பழங்களை 25 ஆயிரம் வரை விற்றோம். மேலும், பாலூர் பண்ணையினர் இதன் விதைகளை வாங்கிச்சென்று கன்றாக்கி விற்பனை செய்துவருகின்றனர்” என்றார்.

'ஆயிரம் காய்ச்சி' பலாமரம்

மேலும், இதுகுறித்து மாணிக்கவாசகன் என்பவர், ”இந்த மரத்தின் மேலே உள்ள பழங்களைவிட வேர்ப் பகுதியில் உள்ள பழங்கள் அதிக ஊட்டச்சத்து மிக்கவை. பாலூர் பண்ணையினர் இதன் பழங்களை ஆய்வு செய்ததில் 27 விழுக்காடு இனிப்புச் சுவை உள்ளதாகத் தெரிவித்தனர். தற்போது தோட்டக்கலைத் துறையின் ஆலோசனைப்படி, இந்த மரத்தைப் பராமரித்து வருகிறோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: வாழ்வாதாரம் இழந்து நிற்கும் பெரம்பலூர் விவசாயிகள் - கைக்கொடுக்குமா அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.