ETV Bharat / state

சுபஸ்ரீ மரணம்: புது சட்டம் இயற்ற திருமாவளவன் வலியுறுத்தல்! - vck party leader thirumavalavan

கடலூர்: விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் வைப்பது தொடர்பாக சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

thirumavalavan
author img

By

Published : Sep 14, 2019, 10:10 AM IST

கடலூர் மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகியின் பட திறப்பு விழாவிற்கு வந்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ விளம்பரப் பலகை தட்டி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் கொடியத் துயரம் என்றும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறினார். அவருடைய குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் சுபஸ்ரீ குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Thirumavalavan Talks about flex and banner issue

தொடர்ந்து பேசிய அவர், விளம்பரப் பலகைகள் வைப்பது, சுவர் விளம்பரங்கள் செய்வது, கொடி கட்டுவது, தோரணம் கட்டுவது போன்றவற்றில் காவல்துறை ஆளுங்கட்சிக்கு ஒரு அணுகுமுறை எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அணுகுமுறை பிற கட்சிகளுக்கு ஒரு அணுகுமுறை என கையாண்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். ஆளுங்கட்சியினர் எந்த கட்டுப்பாடும் இல்லாமல், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி விரும்பினாலும் கொடி தோரணங்களை கட்ட முடியும், விளம்பரத் தட்டிகளை வைக்கமுடியும் என்றார்.

சுபஸ்ரீ உயிரிழக்கக் காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றும் இதில் காவல்துறையாக இருந்தாலும் ஆளும் கட்சி தரப்பினராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். விளம்பரத் தட்டிகள் வைப்பது தொடர்பாக அரசு எந்த பொது வரையறைகளையும் கொண்டிருக்கவில்லை, உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் போதுமானவையாக இல்லை. எனவே இதுதொடர்பாக சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என்றும் தெரிவித்தார்.

Intro:விளம்பர பலகைகள் வைப்பது தொடர்பாக சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்- திருமாவளவன்

Body:கடலூர்
செப்டம்பர் 14,

விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகியின் பட திறப்பு விழாவிற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ விளம்பரப்பலகை தட்டி கீழே விழுந்து உயிரிழந்தது இது கொடியத் துயரமாகும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அவருடைய குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி வழங்க வேண்டும் அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறினார்.

விளம்பரப் பலகைகள் வைப்பது சுவர் விளம்பரம் செய்வது கொடி கட்டுவது தோரணம் கட்டுவது போன்றவற்றில் காவல்துறை ஆளுங்கட்சிக்கு ஒரு அணுகுமுறை எதிர்க்கட்சித் ஒரு அணுகுமுறை பிற கட்சிகளுக்கு ஒரு அணுகுமுறை என கையாண்டு வருகிறது. ஆளுங்கட்சியினர் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எப்படி விரும்பினாலும் கொடி தோரணங்களை கட்ட முடியும் விளம்பரத் தட்டிகளை வைக்கமுடியும் சாலைகளை மறித்து குறுக்கும் நெடுக்குமாக இருந்த விளம்பர பதாகைகள் வைக்க முடியும் ஆளுங்கட்சிக்கு ஒரு அணுகுமுறை என்று காவல்துறை தமிழகம் முழுவதும் கடைபிடித்து வருகிறது வளரும் கட்சிகளுக்கு மிகுந்த நெருக்கடிகளை விடுதலைச்சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு கடுமையான நெருக்கடிகளை தருகிறது.

இன்றைக்கு ஆளுங்கட்சி தடுத்து வைக்கப்பட்ட ஒரு விளம்பரத் தட்டி இருசக்கர வண்டியில் பயணம் செய்த சுபஸ்ரீ மீது சரிந்து விழுந்ததால் அவர் நிலை தடுமாறி கீழே வீழ்ந்து லாரியில் மோதி அவர் உயிரிழக்க நேர்ந்தது இதற்கு காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை காரணமானவர்கள் காவல்துறை ஆக இருந்தாலும் ஆளும் கட்சி தரப்பினராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் விளம்பரத் தட்டிகள் வைப்பது தொடர்பாக அரசு எந்த பொது வரையறைகளையும் கொண்டிருக்கவில்லை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் போதுமானவையாக இல்லை எனவே இதுதொடர்பாக சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. அதே வேளையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான் வேண்டுகோள் விடுத்தனர் இத்தகைய ஆடம்பர ஆர்ப்பாட்ட விளம்பர பதாகைகளை நிறுவும் போக்கை முற்றாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். இது நீண்டகாலமாக தான் விடுத்து வருகின்ற வேண்டுகோள் பட்டாசு வெடிக்க கூடாது பெரிய அளவில் விளம்பர தட்டிகள் வைக்க கூடாது பொதுமக்களுக்கு வெறுப்பூட்டும் வகையில் தாரை தப்பட்டை போன்ற தம்பட்டம் கூடாது என்றெல்லாம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் இப்போதும் சுபஸ்ரீ மறைவுக்கு பிறகு திமுக உள்ளிட்ட பல கட்சிகள் இந்த நிலைப்பாடு மேற்கொண்டிருப்பது வரவேற்க்கதக்கது. விடுதலைச் சிறுத்தைகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.