கடலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் பெரும் கலவரமாக மாறியது. இதனையடுத்து இன்று நீதிமன்றத்தின் உத்தரவின் படி மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தந்தை ராமலிங்கம், "என் மகளின் நிலைமைக்கு காரணமான பள்ளி தாளாளர், அவரது மனைவி, மகன்கள், பள்ளி ஆசிரியை 3 பேர் என மொத்தம் 7 பேர் குற்றவாளிகள், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.
நான் என் மகளை புதைக்கவில்லை, விதைத்திருக்கிறேன், அவள் மரமாக வளர்ந்து இதற்கு காரணமானவர்களை வேரறுப்பாள்.
இனியும் இது போன்ற சம்பவம் எந்த மாணவர்களுக்கும் நடக்கக்கூடாது. அரசு தற்போது வேகமாக வழக்கை விசாரித்து வருகிறது, நீதி கிடைக்கும் என நம்புகிறேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாணவி ஸ்ரீமதி உடல் சொந்த ஊரில் அடக்கம்