* மருத்துவமனை மற்றும் மருத்துவத் துறை பணியாளர்களைப் பாதுகாக்க தனிச்சட்டம் ஒன்றிய அரசு இயற்ற வேண்டும்,
* ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நிலையான உறுதியான பாதுகாப்பு வேண்டும்,
* மருத்துவமனையைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்,
* மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களைத் தண்டிக்கும் விதமாக ஒன்றிய அரசும், மாநில அரசும் 2008ஆம் ஆண்டு சட்டம் 48 பயன்களை எடுத்துரைத்து மருத்துவமனை மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பு சட்டம் ஏற்ற பரிந்துரை செய்ய வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவர் சங்கம் கடலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவச் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் மருத்துவர் பாண்டியன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக இந்திய மருத்துவச் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மருத்துவர் கேசவன், மருத்துவர் முகுந்தன் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.