ETV Bharat / state

கடலூரில் சுவர் இடிந்து  உயிரிழந்த குடும்பத்திற்கு ஸ்டாலின் நிதி உதவி!

கடலூர்: கடந்த 29ஆம் தேதி சுவர் இடிந்து மூன்று பேர் உயிரிழந்த குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ. 1 லட்சம் நிவாரண நிதி வழங்கினார்.

stalins financial support to a family of 3 death person by the wall collapses in cuddalore
stalins financial support to a family of 3 death person by the wall collapses in cuddalore
author img

By

Published : Dec 2, 2019, 4:08 PM IST

கடலூரில் பெய்த தொடர் கனமழையால் கடந்த 29ஆம் தேதி கம்மியம்பேட்டை பகுதியில் நாராயணன் என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நாராயணன், மனைவி மாலா மகேஸ்வரி, பேத்தி தனஶ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிதியுதவி அளித்த மு.க. ஸ்டாலின்

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் , முன்னாள் அமைச்சர்கள் நேரு , எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் சுவர் இடிந்து விழுந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு திமுக சார்பில் ரூ 1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதையும் படிங்க: 17 பேர் மரணத்துக்கு காரணமாக துணிக்கடை அதிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்பாட்டம்!

Intro:சுவர் இடிந்து பலியானோர் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிதி உதவிBody:கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் கடந்த 29ஆம் தேதி சுவர் இடிந்து 3 பேர் பலியான குடும்பத்திற்கும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்

கடலூர் தொடர் கனமழையால் கடந்த 29 தேதி கம்மியம்பேட்டை பகுதியில் நாராயணன் என்பவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் வசித்து வந்தார் தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மனைவி மாலா மகேஸ்வரி பேத்தி தனஶ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

இதில் 3 பேர் படுகாயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று உள்ளனர் சுவர் இடிந்து விழுந்த குடும்பத்தினரை திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நேரு , எம்ஆர்கே பன்னீர்செல்வம் இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டார் பின்னர் படுகாயமடைந்த நாராயணன் உறவினர்களிடம் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்

தொடர்ந்து சுவர் இடிந்து விழுந்த உயிரிழந்த குடும்பத்தினருக்கு திமுக சார்பில் 1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பார்வையிட்ட பின்னர் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.