கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தானியங்கி உடல் வெப்ப பரிசோதனைக் கருவி திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நேற்று (ஜூலை8) தொடங்கிவைத்தார்.
இதன் மூலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள், காவல் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சந்திக்க வரும் பார்வையாளர்கள் இக்கருவி முன்னால் நிற்கும் போது தானியங்கி மூலம் உடல் வெப்ப நிலையை காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் உடலின் வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸ் மேல் இருந்தால் இக்கருவியில் ஒரு எச்சரிக்கை ஒலி ஒலிக்கும். மேலும் அவர்களின் புகைப்படம் தானாக படம் பிடிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இக்கருவி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் இணைய வழி பரிமாற்றம் (Artificial intelligence and internet of things ) மூலம் செயல்படுகிறது.
இதன் மூலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பார்வையாளர்கள் யாராவது வெப்பநிலை அதிகமாக இருந்தால் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் இக்கருவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் வழிகாட்டுதலின்படி காவல் தொழில்நுட்ப பிரிவு ஆய்வாளர் ரவிக்குமார் இக்கருவியை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிவாரண உதவி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!