கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள திருத்தரையூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரின் மகள் மஞ்சு வீட்டிற்கு எதிரே உள்ள தண்டவாளத்திற்கு ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தண்டவாளத்திலேயே வேகமாக ஓடி அருகிலிருந்த சேந்தநாடு ரயில்வே அதிகாரியிடம் தகவல் கொடுத்தார்.
பின்னர், திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் கடலூருக்கு முன்னதாக வழியில் நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில்வே ஊழியர்கள் தண்டவாள விரிசலைச் சரி செய்த பிறகு ரயில் காலதாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
இதைத் தொடர்ந்து உரிய நேரத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தவிர்த்து ரயில்வே துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த மஞ்சுவின் வீட்டிற்குச் சென்ற ரயில்வே போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஹைதராபாத் நிஜாமின் ரூ.250 கோடி சொத்துக்கு சீல்!