ETV Bharat / state

’தமிழையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முயற்சி நடைபெறுகிறது...!’ - ஆளுநர் தமிழிசை - ஆளுநர்

தமிழையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முயற்சி நடைபெறுவதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

’தமிழையும் ஆன்மீகத்தையும் பிரிக்க  முயற்சி நடக்கின்றது...!’ - தமிழிசை சவுந்தரராஜன்

author img

By

Published : Oct 8, 2022, 2:23 PM IST

கடலூர்: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பிரதோஷ நாளில் நடராஜரை தரிசனம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சிதம்பரம் நடராஜருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நடராஜர் கோயிலுக்கு வரும்போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். தமிழ்நாட்டு மக்கள் ஆனந்தமாக இறைவனை தரிசனம் செய்கின்றனர்.

8-October-202’தமிழையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முயற்சி நடைபெறுகிறது...!’ - ஆளுநர் தமிழிசை2/16584754_cdl.mp4

கோயிலுக்கு வருவது ஒரு சைக்கோ தெரபி, என்ன பாரம் இருந்தாலும் சரியாகிவிடும். வெளிநாடுகளில் மூளைக்கு மூளை மனநல மருத்துவமனை இருக்கும். தமிழ்நாட்டில் கோயில்கள் இருக்கும். இறைவன் காலடியில் கஷ்டங்களை சமர்ப்பித்து விட்டால் கஷ்டங்கள் நீங்கிவிடும்.

தமிழையும், ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது. தமிழும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. ஆன்மீகத் தமிழ் தான் நமக்கு பெருமை சேர்த்து கொண்டிருக்கிறது. சில பேரின் சூழ்ச்சியால் ஆன்மிகத்துக்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லை என ஒரு கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தவறானது. தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிக்கவே முடியாது.

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கப்பட்டது, அதேபோன்று வேற எந்தெந்த பொதுத் துறைகள் தனியார்மயம் ஆக்கப்படும் என்ற கேள்விக்கு எங்களின் கொள்கை முடிவில் எது எது மக்களுக்கு நல்லதோ அதை செய்வோம்” என்றார்.

மேலும், பொதுத் துறைக்குச் சொந்தமானதை தனியாருக்கு மாற்றம் செய்வதற்காகத் தான் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக உங்களை நியமனம் செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறுகிறாரே என்ற கேள்விக்கு. ”எதிர்க்கட்சித் தலைவர் சிவா அப்படித்தான் சொல்வார். இந்த சிவா கிட்ட தான் முறையிட வேண்டும். தவறாக பேசுகின்றனர். சிபிஎஸ்இ வேண்டாம், குழந்தைகளும் நல்லா படித்து முன்னேற வேண்டும் என்பதுதான் நமது எண்ணம்.

இதேபோல் நவோதயா வேணாம், கேந்திரிய வித்யாலயா வேண்டாம், இப்படியே சொல்லி சொல்லி மாணவ மாணவிகளின் கல்வித்தரத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் தங்களுக்கு வேண்டியவர்களை எல்லாம் சேர்த்து நன்றாக படிக்க வைக்கிறார்கள், அரசாங்க பள்ளிகளின் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்பதுதான் நமது எண்ணம். அதைத்தான் செயலாற்றி வருகிறோம்.

என்னை புதுச்சேரி மக்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருங்கள் என்று தான் நியமித்து அரசு. நான் மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறேன். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை" என்றார்.

இதையும் படிங்க: சிவகங்கையில் இளைஞர் வீட்டில் என்ஐஏ சோதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.