கடலூர் : கம்மியம்பேட்டை மீனாட்சி நகரைச் சேர்ந்தவர், இளமாறன். இவரது வீட்டின் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாத்திரங்களை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தனர். அப்போது, சாதம் செய்ய பயன்படுத்தும் பிரஷர் குக்கர் ஒன்றில் சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்தபடி வெளியே வந்துள்ளது.
அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இளமாறன் குடும்பத்தினர். அப்பகுதியில் பாம்பு பிடிக்கும் நபருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த அந்த நபர், நல்ல பாம்பை லாவகமாகப் பிடித்தார்.
பின்னர் அதனை சாக்குப்பை ஒன்றில் பத்திரமாக எடுத்துச்சென்று வனப்பகுதியில் விட்டுவிட்டார். சமைக்க பயன்படுத்தும் பிரஷர் குக்கரில் பாம்பு இருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : சாம்பாரில் எலி மருந்து - வேலைக்காரன் துணையுடன் கணவனைக் கொன்ற மனைவி