கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல் குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன்(63). இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அன்பழகனை கைது செய்து கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தற்போது, இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி கருணாநிதி கூறினார். அதில், அன்பழகன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
![குற்றவாளி அன்பழகன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cdl-01-posco-judgement-photo-script-7204906_11032020094524_1103f_1583900124_1009.jpg)
அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: வாணியம்பாடி அருகே சிறுமி கூட்டு பாலியல் வண்புணர்வு: மூவர் கைது