கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு நிஷா (13) என்ற மகளும், கவியரசன் (11) என்ற மகனும் இருந்தனர்.
நிஷா புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பும், கவியரசன் மணப்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.
நேற்று (செப்.28) காலை நிஷாவும், கவியரசனும் மாடுகளை மேய்க்க அவர்களது நிலத்திற்குச் சென்றுள்ளனர். மாலையில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியதும், அவர்கள் மாடுகளை வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு வந்தனர்.
அந்த சமயத்தில் அவர்கள் மீது இடி விழுந்தது. இதில் நிஷாவும், கவியரசனும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த புதுப்பேட்டை காவல் துறையினர் இருவரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது