கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மார்ச் 24ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் பால், மருந்தகங்கள், மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்டவை தவிர மற்ற கடைகள் மூட உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கடலூர் வண்டிப்பாளையத்தில் 144 தடை உத்தரவை மீறி சிமெண்ட் கடை ஒன்றில் வியாபாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து காவல்துறையினர், வட்டாட்சியருக்கு தகவல் அளித்தனர். அதன்பின் வட்டாட்சியர் உத்தரவின் பேரில், அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளர் வேல்முருகன் (44), ஊழியர் பாபு (65) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: அரசு உத்தரவை மீறி வியாபாரம் செய்த ஜவுளிக்கடை - அபராதம் விதித்து நடவடிக்கை