கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்தந்த மாவட்டத்தில் அரசின் நெறிமுறைகளைப் பின்பற்ற அனுமதி பெற வேண்டும் என தனியார் மருத்துவமனைகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு வந்த நிலையில் ஒருசில தனியார் மருத்துவமனையில் அனுமதி பெற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அரசின் வழிமுறைகளை மீறி கரோனா நோயாளிகளுக்கு நாள்தோறும் சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, கடலூர் மாவட்ட நிர்வாகத்திறக்கு புகார் வந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்னதாக மருத்துவமனை இணை இயக்குநர், வட்டாட்சியர் தனியார் மருத்துவமனைக்கு சென்று அதிகளவில் கூட்டத்தை சேர்க்க வேண்டாம் அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
இருப்பினும், தொடர்ந்து அதிகளவில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இன்று (ஜூன் 9) காலை அதிரடியாக கடலூர் அரசு மருத்துவமனை இணை இயக்குநர் ரமேஷ்பாபு, காவல்துறையினர் கரோனா விதி முறைகளை மீறிய தனியார் மருத்துவமனைக்கு விரைந்தனர். அரசின் வழிமுறைகளை பின்பற்றத்தாலும் மருத்துவமனைக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது.