கடலூர் மாவட்ட மீனவர்கள் சுருக்குமடி வலையினை பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது எனவும் மீறி பயன்படுத்தினால் படகுகள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட மீன்வளத்துறை அலுவலர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று கடலூர் துறைமுகத்தில் ஒரு தரப்பினர் அவசர ஆலோசனைக் கூட்டம் போட்டு சுருக்கு மடி வலை பயன்படுத்தி மீன் பிடிக்க முடிவு செய்துள்ளதாக மீன்வளத்துறைக்கு தகவல்கிடைத்து.
அதையடுத்து கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் தலைமையில் மீன்வளத்துறை அலுவலர்கள் கடலூர் துறைமுகப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அந்தச் சோதனையில் சுருக்குமடி வலை வைக்கப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட படகுகளுக்கு சீல் வைப்பட்டது.
அதனால் மீனவர்கள் சீல் வைத்த அலுவலர்களை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். அதனால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி சிறைப்பிடிப்பு முடித்துவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் சிறைபிடிப்பு - எம்.ஆர்.விஜயபாஸ்கர்