கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு கூட்டம் நடைபெற்றது. கணக்கிட்டு குழு உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜன், பரமசிவம், ராமச்சந்திரன், உதயசூரியன், ராஜா உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தில் 172 கணக்குகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றை விரிவாக கணக்கிட்டு குழு உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் நெல்லிக்குப்பம் பேருந்து நிலையம், சித்தரசூர் பணை வயல், கொய்யா நடவு செய்தல், ஆதிதிராவிடர் பள்ளி விடுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கடலூரில் என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை