கரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகள் வரும் 30ஆம் தேதிவரை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரியை ஒட்டிய கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர்.
குறிப்பாக கடலூர் பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் காத்திருந்து மதுவை வாங்கிச் சென்றனர்.
தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற எதையும் அவர்கள் பின்பற்றவில்லை. இதனால் கரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முழு ஊரடங்கு: மதுபானம், கள் விற்ற பெண் உள்பட மூவர் கைது