கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள போத்திரமங்கலத்தைச் சேர்ந்தவர் சங்கர் (50). கூலித் தொழிலாளியான இவர் நேற்று சாலையில் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இவர் மீது எதிர்பாராதவிதமாக மீட்பு (recovery vehicles) வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த திட்டக்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விசாரணை நடத்தினர்.
மேலும், சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கைதுசெய்யாத காவல்துறையைக் கண்டித்தும், வாகனத்தைப் பறிமுதல்செய்யாததைக் கண்டித்தும் விருத்தாசலம் திட்டக்குடி சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த திட்டக்குடி காவல் துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்துசென்றனர்.