ETV Bharat / state

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை - 13 பேர் கைது! - லாட்டரி சீட்டு விற்பனை

கடலூர்: தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

lottery
lottery
author img

By

Published : Dec 14, 2019, 11:50 AM IST

விழுப்புரம் மாவட்டம் சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த நகை தொழிலாளி அருண் என்பவர் லாட்டரி சீட்டு மோகத்தால் தனது மொத்த சொத்துக்களையும் இழந்து, குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார். தனது மூன்று மகள்களுக்கும் விஷம் கொடுத்துக் கொலை செய்த பின்னர், அருணும் அவரது மனைவியும் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தற்கொலை செய்துகொள்ளும் முன்பு லாட்டரி விற்பனையை முழுவதுமாக ஒழித்துவிடுங்கள் என கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றையும் அவர் தனது செல்ஃபோனில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், காவல் துறையினர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கடலூர் மாவட்டத்தில் முதுநகர் பகுதியைச் சேர்ந்த ஜவகர், சிதம்பரத்தைச் சேர்ந்த அழகேசன், அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்த குமரேசன், கீரப்பாளையத்தைச் சேர்ந்த ஷாஜகான், கார்த்திக், மகாதேவன், அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ரா.சுந்தரவடிவேல் உள்ளிட்ட 13 பேரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும் லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக பொதுமக்கள் 90873 00100 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...

லாட்டரியால் சீரழிந்த குடும்பம் - 5 பேர் தற்கொலை..

Intro:கடலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 13 பேர் கைதுBody:கடலூர்
டிசம்பர் 14,

கடலூரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்த நகை தொழிலாளி அருண் என்பவர் லாட்டரி சீட்டு வாங்கி அதில் மொத்த பணத்தையும் இழந்துள்ளார். மேலும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெறுப்படைந்த அருண் தனது மனைவி சிவகாமி மற்றும் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதை தொடர்ந்து போலீசார் லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் முது நகர் பகுதியை சேர்ந்த ரா.ஜவகர் 58 சிதம்பரத்தை சேர்ந்த ரா.அழகேசன் 48 அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த கா.குமரேசன் 37 கீரப்பாளையம் சேர்ந்த அ.ஷாஜகான் 38 த.கார்த்திக் 31 ஆ.மகாதேவன் 32 தி.சின்னத்துரை 54 பூதகேணி பகுதியை அ.அன்வர்தீன் 58 மணலூர் பகுதியை சேர்ந்த அ.அறிவழகன் 37 அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ரா.சுந்தரவடிவேல் 31 புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சு.மாரி என்ற கலாமாறன் 32 பெருமத்தூர் பகுதியை சேர்ந்த சு.மகேந்திரன் 38 திட்ட குடியை சேர்ந்த ரா.புகழேந்தி 53 ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் லாட்டரி சீட்டு விற்பனை சம்பந்தமாக பொதுமக்கள் 90873 00100 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தெரிவித்துள்ளார்.
*No photo*Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.