கடலூர்: புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குநர் செந்தில் செல்வம் என்பவரது திரைப்பட அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக யூடியூபர் டிடிஎஃப் வாசன் வருகை தந்தார். இதனால் அவரை காண்பதற்காக அவரது ரசிகர்கள் 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்தனர்.
இதனால், புதுப்பாளையம் பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர், டிடிஎஃப் வாசனின் ஆதரவாளர்களை விரட்டி அடித்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது வழக்குப்பதிவும், அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது, பொதுமக்களுக்கு இடையூறாக கூட்டம் கூட்டியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ் டிடிஎஃப் வாசன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இயக்குநர் செந்தில் செல்வம் மற்றும் விக்னேஷ் ஆகிய மூன்று பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 50 வயதில் உலக ஆணழகன் போட்டியில் வென்ற 'தமிழ்நாட்டு ஹல்க்'!