லடாக் பகுதியில் 1959ஆம் ஆண்டு சீன ராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். அன்று முதல் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீர வணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்த 264 காவலர்களுக்கும் அஞ்சலி செலுத்தும்விதமாக கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ராஜேந்திரன் சிலைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்வில் ஊர்க்காவல் படை வட்டார தளபதி சுரேந்திர குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன், உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கிட் ஜெயின், துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆயுதப்படை ஆய்வாளர் குமார் தலைமையில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் காவலர் நினைவு தினம்: நினைவிடத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை