தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல், 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றின் வாக்கு எண்ணும் பணியானது நாளை நடைபெறுகிறது. அதனையொட்டி வாக்கு எண்ணிக்கை மையம், பதற்றமான பகுதிகளுக்கு காவலர்களை அனுப்பும் பணியை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
மொத்தமுள்ள 1280 காவலர்கள், 42 மொபைல் பார்ட்டி மூன்று ஏடிஎஸ்பி, ஏழு டிஎஸ்பி, 27 காவல் ஆய்வாளர்கள், 160 துணை ஆய்வாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், காவலர்கள் எவ்வாறு பணியினை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரைகளை வழங்கினார். இதற்கு பொதுமக்கள் காவலர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து அமைதி காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.