ETV Bharat / state

கனகசபை ஏறிய பக்தர்கள் - சிதம்பரம் கோயிலுக்குள் போலீஸ் படை..!

சிதம்பரம் கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி அளித்தைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

சிதம்பரம் நடராஜர் ஆலயம்
சிதம்பரம் நடராஜர் ஆலயம்
author img

By

Published : May 19, 2022, 8:08 PM IST

கடலூர்: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கனகசபை மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்வது வழக்கம், ஆனால், கரோனா தொற்று காலத்தில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது அனைத்து ஆலயங்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையிலும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பொது மக்கள் கனகசபை மேடையில் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இது தொடர்பாக பல்வேறு பொது நல இயக்கங்கள் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றம் கூறியதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கனகசபை மேடையில் ஏற அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது.

ஆனால், சிவாச்சாரியார்கள் கனகசபை மேடையில் ஏறுவதற்கு அனுமதி வழங்க முடியாது என சிதம்பரம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தனர். இந்நிலையில் மாலை 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பல்வேறு பொது நல இயக்கங்கள் ஆலயத்தின் முன் திரண்டனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.

விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் மற்றும் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கோயிலின் உட்பிரகாரத்தில் குவிந்ததை தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை காணப்பட்ட நிலையில் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், கனகசபை மேடையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்ந்து அனைத்து பக்தர்களும் கனகசபை மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்பினர். மேலும், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை அரசுடமையாக்க வேண்டும் என அனைத்து பொது நல இயக்கங்கள், பக்தர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவை தொல்பொருள் கண்காட்சியை தொடங்கி வைத்து வியந்து ரசித்த முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.