ETV Bharat / state

கடலூரில் வெங்காயம் விலை குறைந்ததால் திரண்ட பொதுமக்கள்

கடலூர்: ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், கடலூர் உழவர் சந்தையில் இன்று 20 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதால் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

வெங்காயம் விலை குறைவு
onion price decreases
author img

By

Published : Dec 11, 2019, 11:34 AM IST

நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் சாமானிய மக்கள் வெங்காயத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது வெங்காயத்தை இரண்டு டன்னுக்கும் மேல் பதுக்கி வைத்திருந்தால், ஏழு ஆண்டு சிறை என அரசு அறிவித்த நிலையில் பதுக்கி வைத்த வெங்காயம் முழுவதும் வெளியில் சந்தைக்கு வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் பெங்களூர் சந்தைக்கு வெங்காயம் வந்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது, இதனால், கடலூர் வியாபாரிகள் பெங்களூரிலிருந்து குறைவான விலைக்கு பல டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து வந்தனர். நேற்று கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம் இன்று காலை கடலூர் உழவர் சந்தையில் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதை ஏராளமானோர் முண்டியடித்துக் கொண்டு வெங்காயத்தை வாங்கினர்.

உழவர் சந்தைக்கு திரண்ட பொதுமக்கள்.

மேலும் கடலூரில் வெங்காயத்தை நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு மூன்று வகையான வெங்காயத்தை கிலோ 20 ரூபாய்க்கும், பல்லாரி வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகின்றனர். 200 ரூபாய்க்கு வெங்காயம் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் சிக்கித்தவித்த சாமானிய மக்களுக்கு தற்போது கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுவது வரப்பிரசாதமாக உள்ளது என இல்லத்தரசிகள் தெரிவித்தனர்.

வெங்காயம் விலை குறைவாள் மகிழ்ச்சியில் பொதுமக்கள்.

இதையும் படிக்க: வெங்காயம் பதுக்கலை தடுக்க சந்தைகளில் அலுவலர்கள் சோதனை!

Intro:கடலூரில் வெங்காயம் விலை மேலும் குறைவு நேற்றைய தினம் கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கடலூர் உழவர் சந்தையில் 20 ரூபாய்க்கு விற்பனைBody:கடலூரில் வெங்காய விலை சரிவு ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியது

நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அதன் விலை உச்சத்தை தொட்டது. இதனால் சாமானியமக்கள் வெங்காயத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது தற்போது வெங்காயத்தை 2 டன்னுக்கும் மேல் பதுக்கி வைத்திருந்தால் அரசு ஏழு ஆண்டு சிறை என அறிவித்த நிலையில் பதுக்கி வைத்த வெங்காயம் முழுவதும் வெளியில் சந்தைக்கு வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்றையதினம் பெங்களூர் சந்தைக்கு வரத்து வெங்காயம் வந்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது இதன்காரணமாக கடலூர் வியாபாரிகள் பெங்களூரிலிருந்து குறைவான விலைக்கு பல டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து வந்தனர் நேற்றையதினம் கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம் இன்று காலை கடலூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாய்க்கும் 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு என விற்கப்பட்டது இதனை ஏராளமான மக்கள் முண்டியடித்துக் கொண்டு வெங்காயத்தை ஆர்வத்துடன் வாங்கினர் மேலும் கடலூரில் வெங்காயத்தை நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு மூன்று வகை வெங்காயத்தை கிலோ 20 ரூபாய்க்கு பல்லாரி வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர் 200 ரூபாய்க்கு வெங்காயம் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் சிக்கித்தவித்த சாமானிய மக்களுக்கு தற்போது கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்வதால் வரப்பிரசாதமாக உள்ளது என இல்லதரசிகள் தெரிவித்தனர் தொடர்ந்து இதே போல் வெங்காயம் விலை குறைவு குறைந்து காணப்பட்டால் அனைவரும் வெங்காயத்தை பயன்படுத்த முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.