ETV Bharat / state

கடலூரில் ரூ.26 லட்சம் பறிமுதல்: ஹவாலா பணமா என தீவிர விசாரணை - போதைப்பொருட்கள் விற்பனை சோதனை

கடலூர் தனியார் பேருந்தில் பயணித்தவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் ரூ.26 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த பணம் ஹவாலா பணமா என்ற கோணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூரில் ரூ.26 லட்சம் பறிமுதல்
கடலூரில் ரூ.26 லட்சம் பறிமுதல்
author img

By

Published : Feb 26, 2023, 8:55 AM IST

கடலூர்: கடலூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் கஞ்சா மற்றும் பல்வேறு போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் இருக்கவும் பல்வேறு குற்ற நிகழ்வுகளைத் தடுக்கவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, பேருந்தின் ஒரு பகுதியில் பை ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. அதில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஏதேனும் கடத்தி வரப்படுகிறதா என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால், பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதைக் கண்டு விசாரித்தபோது, பேருந்தில் இருந்து ஒருவர் தப்பியோட முயன்றுள்ளார்.

பின்னர் அவரைச் சுற்றி வளைத்த போலீசார் புதுநகர் காவல் நிலையம் கொண்டு வந்த தீவிர விசாரணை செய்தனர். பிடிபட்ட அந்த நபர் திருச்சியை சேர்ந்த பீர் முஹம்மது (42), என்பது தெரிய வந்தது. மேலும் பையில் ரூ.26 லட்சம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட பணம் கடலூரில் சாவடி பகுதியில் தனக்கு வேண்டியவர்களுக்கு கொடுப்பதற்காக சென்னையில் இருந்து கொண்டு வருவதாக போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட பணம் ஹவாலா பணமா என்பது குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் புதுநகர் போலீசார் சென்னை வருமானவரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் வினித் வர்மா, தாமோதரன் உள்ளிட்டவர்கள் புதுநகர் காவல் நிலையத்தில் வந்து, கைது செய்யப்பட்ட பீர் முகமது மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Erode by election: வெளி மாவட்ட வாகனங்கள் தீவிரத் தணிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.