கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் இன்று (டிச.31) செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது: 2020ஆம் ஆண்டு ரவுடிகள் தொடர்பான கொலைச் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. இந்தாண்டில் 130 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை சம்பந்தமாக 77 பேர், சொத்து அபகரிப்பு சம்பந்தமாக 18 பேர், சாராய கடத்தல் சம்பந்தமாக 29 பேர், திருட்டு வழக்கு சம்பந்தமாக 9 பேர் முறையே குண்டர் தடுப்பு சட்டத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது கடந்தாண்டை விட அதிகம்.
சொத்து குற்ற வழக்குகள் 86விழுக்காடு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. 310 வழக்கு பதியப்பட்டது, 267 வழக்கு துப்புதுலக்கப்பட்டுள்ளன.
50 கொலை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 48 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சாலை விபத்துகளில் கடந்த 2019ஆம் ஆண்டை விட 2020ஆம் ஆண்டு 121 சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
விபத்து வழக்குகள்
கடந்தாண்டு சாலை விபத்தில் 302 பேர் உயிரிழந்தனர். 2019ஆம் ஆண்டு 2816 வழக்குகள் சாலை விபத்து வழக்குகளாக பதியப்பட்டது, 2020 ஆம் ஆண்டு 2602 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இந்தாண்டு சாலை விபத்து வழக்குகள் 214 குறைந்துள்ளன. கரோனா தொடர்பாக 33 ஆயிரத்து 914 வழக்குகள் பதியப்பட்டு 44 ஆயிரத்து 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 ஆயிரத்து 536 அபராத வழக்குகளில் 8 லட்சத்து 28 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 18ஆயிரத்து 909 வாகன திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு காவல் துறைக்கு மிகவும் கடுமையான பணி இருந்தது.
இயற்கை சீற்றம், கரானா பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளில் காவல் துறையினர் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்”என்றார் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்.
இதையும் படிங்க:937 பேருக்கு கரோனா பாதிப்பு - அதிலிருந்து 1,038 பேர் குணமடைந்தனர்!