கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி சாலையைச் சேர்ந்த செல்வம்(38) ஆட்டோ டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு இவரின் வீட்டின் பூட்டை உடைத்து வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருடுவதற்கு முயற்சித்திருக்கிறார்.
அப்போது பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து கைகளைப் பின்புறமாக கட்டி தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் இதுகுறித்து விருத்தாசலம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் அந்த வாலிபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில், அந்த இளைஞர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பரமோத்குமார்(28) என்பதும், விருத்தாசலம் பகுதியில் உள்ள வீடுகளில் சலவைக்கல் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், இவர் வேறு ஏதேனும் வீடுகளில் கொள்ளையடித்திருக்கிறா என்பது குறித்து காவலர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐந்து கிலோ கஞ்சாவுடன் பெண் கைது