கடலூர் : மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் 26 ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூரில் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அபிநவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், முன்பை விட அதிக அளவில் புதிய வகை கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாலும், அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு வாய்ப்புகளை உருவாக்கும் என்பதாலும் போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும் நபர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்திற்கு விவசாய டிராக்டர்களைப் பயன்படுத்தினால் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 177 R/w 179 மற்றும் 207 -ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாலைப் போக்குவரத்து மாத விழாவில் குத்தாட்டம் போட்ட பெண்கள், முகம் சுளித்த மக்கள்