நெய்வேலியின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5ஆவது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பராமரிப்பு பணிகளை ஒழுங்காக மேற்கொள்ளாததால்தான் இதுபோன்ற விபத்து தொடர்ந்து நடப்பதாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக இரண்டாவது அனல் மின் நிலையத்தின் முதன்மை பொது மேலாளர் கோதண்டம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.