ETV Bharat / state

என்எல்சி வெடிவிபத்து: இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி - neyveli nlc boiler explosion

கடலூர்: நெய்வேலி என்எல்சி வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

nlc-explosion-negotiate
nlc-explosion-negotiate
author img

By

Published : Jul 2, 2020, 9:08 AM IST

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி அனல் மின்நிலையத்தின் 5ஆவது யூனிட் கொதிகலன் ஒன்று நேற்று காலை (ஜூலை 1) திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து விபத்து தொடர்பாக என்எல்சி நெய்வேலியில் தொழிற்சங்க நிர்வாகிகள், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், என்எல்சி நிர்வாக இயக்குனர் ராகேஷ்குமார் தலைமையில் முன்று தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடும், வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்க வேண்டும் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் என்எல்சி நிர்வாகம் தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடும், நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தனர். அதனை உறவினர்கள், தொழிற்சங்கங்கத்தினர் ஏற்றுக் கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதையடுத்து இன்று ஜூலை 2ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: என்எல்சியில் பாய்லர் வெடித்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.