ETV Bharat / state

அனல்மின் நிலைய விபத்து: உயர்மட்டக் குழு விசாரணைக்கு என்.எல்.சி உத்தரவு! - காவல்துறை விசாரணை

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அணுமின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணைக்கு என்.எல்.சி  நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

NLC boiler blast: NLC order for high-level investigation (Urgent)

author img

By

Published : Jul 1, 2020, 10:32 PM IST

கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்எல்சி அனல் மின் நிலையத்தில் சுரங்கம் இரண்டில் நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், சுரங்கம் இரண்டில் உள்ள யூனிட் ஐந்தில் அமைந்திருக்கும் பாய்லர் திடீரென வெடித்து, தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து என்எல்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று (ஜூலை 1) இரண்டாவது வெப்ப மின் நிலையத்தின் யூனிட் 5 இல் சுமார் 9.45 மணி பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு நிர்வாகி, இரண்டு மேற்பார்வையாளர்கள், மூன்று நிர்வாகமற்ற ஊழியர்கள் மற்றும் பதினேழு ஒப்பந்தத் தொழிலாளர்கள் என இருபத்து மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

காயமடைந்த பதினேழு பேரும் உடனடியாக என்.எல்.சி.ஐ.எல் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். அவர்களில் பதினாறு பேர் மேல் சிகிச்சைக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும் சிறிய காயங்களுடனும், ஒருவர் என்.எல்.சி. மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், இந்த தீ விபத்து சம்பந்தமாக ஓய்வுபெற்ற தொழில்நுட்ப பிரிவு இயக்குநர் பி.கே.மோகபத்ரா தலைமையில் உயர்மட்டக் குழு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 210 மெகாவாட் கொண்ட நான்கு அலகுகளும் உடனடி பாதுகாப்பு தணிக்கைக்காக உடனே மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளன' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.