சென்னை பாபா அணு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா விருதுநகரில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'இந்திய அரசின் அணு ஆராய்ச்சி மையம் இரண்டு விதமான முறையில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதில் முதலாவது மின்சாரம் சம்மந்தப்பட்ட ஆராய்ச்சி, அடுத்ததாகக விவசாயத் தேவைக்கான ஆய்வுகள்.
தரமான விதை மற்றும் இயற்கை சார்ந்த விவசாயத்திற்கு உதவியான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து, இயற்கையில் பெற்ற கடனை இயற்கைக்கு அளிக்கும் விதமாக மக்கும் குப்பைகளில் இ௫ந்து எரிசக்தியை பெறும் நடைமுறை கோவை போன்ற நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் ஆர்.ஓ. தொழில்நுட்பத்திற்கு தடை விதித்துள்ள நிலையில் பயன்பாட்டுக்கு எளிய முறையிலும், தண்ணீரில் உள்ள களங்கம் நீக்கி, போலியோ வைரஸ்சை கூட கட்டுப்படுத்தும் விதமாக புதிய தொழிநுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்தில் மெழுகுவர்த்தி வடிவில் மெமரைன் என்ற கருவி உருவாக்கி, ஆயிரம் ரூபாயில் மக்கள் பயன்பாட்டிற்கு புதிதாக வந்துள்ளதாக' தெரிவித்தார்.
மேலும், “இந்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க உள்ளதாகவும், யெங் இந்தியா திட்டத்தின் மூலம் 8ஆம் வகுப்பிலிருந்து மாணவர்களை பயிற்றுவித்து அவர்களை பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக மாற்ற வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: வெள்ளம் பாதித்த 121 குடும்பங்களுக்கு வீடுகள் - ராமோஜி குழுமம் உதவிக்கரம்